தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள செய்திகுறிப்பில், மேற்குதிசை காற்றின் வீக்க மாறுபாடு காரணமாக நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். Comorin பகுதியில் நிலவும் மாறுபாடு காரணமாக, மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில இடங்களில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.