மனிதனால் ஆராய்ந்து பார்க்க முடியாத ஒரு இடம் பூமியிலேயே உள்ளது என்றால் அது நிச்சயம் ஆழ்கடலில் அமைத்திருக்கும் மரியானா அகழியாக மட்டுமே இருக்கக் கூடும்
ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே குவாம் என்ற சிறிய தீவுக்கு அருகில், நீரின் மேற்பரப்பிற்கு மிகக் கீழே, மரியானா அகழி அமர்ந்திருக்கிறது. மரியானா அகழி தான் பூமியில் அமைந்துள்ள கடலின் மிகவும் ஆழமான பகுதி, இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாத பல மர்மங்கள் இந்த ஆழ்கடல் அகழியில் தான் ஒளிந்துள்ளது.
கண்களுக்கு முழுமையாகத் தென்படாத, பல எண்ணிலடங்கா ரகசியங்களை இந்த அகழி மறைத்து வருகிறது என்கின்றனர். இருப்பது போலவே கடலின் அடியிலும் எரிமலைகள், சிறு குன்றுகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள் என்று அனைத்தும் இருக்கின்றது. மனிதன் இன்னும் கண்டுபிடிக்காத பல கடல் வாழ் உயிரினங்கள் இந்த கடலில் வாழ்கின்றன. இன்னும் பல மர்மங்கள் இந்த பகுதியில் மறைந்து இருக்கிறது என்பது தான் உண்மை
இயல்பான கடல் அழுத்தத்தைப் போல் இல்லாமல், மரியானா அகழியின் கடல் நீர் அழுத்தம் 1000 மடங்கிற்கு அதிகமானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
மரியானா அகழியில் அமைந்துள்ள ‘சேலஞ்சர் மடு’ என்ற பள்ளம் தான். பசிபிக் கடலில் உள்ள மிகவும் ஆழமான பகுதி, இந்த பகுதியை ‘மரியானா நீள்வரிப்பள்ளம்’ என்றும் அழைக்கின்றனர். இது சுமார் 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் ஆழம் கிட்டத்தட்ட 7 மைல் ஆகும். அதாவது சரியாகச் சொன்னால் 36,201 அடி, கிட்டத்தட்ட இமயமலை விட பெரியதாம். இந்த படுகுழியில் இமயமலையை மூழ்கடித்துவிடலாம் என்று நேஷனல் ஜியோகிராஃபிக் கூறியுள்ளது
இப்படி நம்பமுடியாத பூமியின் மிக ஆபத்தான பகுதியை இதுவரை 3 டைவர்ஸ் மட்டுமே ஆராய்ந்துள்ளனர்
ஜாக்ஸ் பிக்கார்ட் மற்றும் கடற்படை லெப்டினன்ட் டான் வால்ஷ் ஆகியோர், 1960 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி உதவியுடன் சேலஞ்சர் ஆழத்தை ஆராய்ந்துள்ளனர். மரியானா அகழி ஆழத்தை ஆராய மேற்கொள்ளப்பட்ட முதல் பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான அழுத்தத்தினால் அவர்களால் 20 நிமிடங்கள் மட்டுமே ஆழ்கடலில் செலவிட முடிந்துள்ளது
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில் திரைப்படத் தயாரிப்பாளரும், அறிவியல் புனைகதை ஆர்வலருமான ஜேம்ஸ் கேமரூன் மரியானா அகழியை நோக்கி தான் உருவாக்கி வடிவமைத்த நீர்மூழ்கி கப்பலில் சேலஞ்சர் டீப்பிற்கு டைவ் செய்தார். கேமரூன் வடிவமைத்து உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் உதவியுடன் அவரால் அங்கு சுமார் மூன்று மணி நேரம் செலவிட முடிந்தது என்பது குறிப்பிடத்தது. இந்த பயணத்தின் போது பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பதிவு செய்துள்ளார்