தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு அதிகாரபூர்வமாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியிணை சென்னை சைபர் கிரைம் போலீசார் தொடங்கியுள்ளனர்.
மேலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் காவல்துறை முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5000 அபராதம் அல்லது மூன்று மாத காலம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.