ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டில் கடந்த சில மாதங்களாக பலபேர் தங்கள் பணங்களை இழந்துள்ளனர் சில பேர் தற்கொலையும் செய்துள்ளனர் இதனால் பெருவாரியான மக்களிடம் அதை அரசு தடை செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த நிலையில் பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் ‘‘இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோரையும் அதில் ஈடுபடுவோர்களையும் குற்றவாளிகளாக கருதி அவர்களை கைது செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு துரிதமாக எடுக்கும் என்று பதிவிட்டுள்ளார் முன்னதாக நேற்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்மி விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது