‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ போன்ற படங்களில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பம்பர்’. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமாரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பம்பர் படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்து இருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.