அண்மையில் பிக்பாஸ் சீசன் 6-வது நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா தனது அம்மாவை நினைத்து கதறி கதறி அழுது கடிதம் ஒன்று எழுதி அனுப்பினார். என் அம்மாவின் அருமை தெரிய ஆரம்பிக்கும்போது தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. இதற்கு பிறகு எனக்கு நீ, உனக்கு நான் என்று வாழ விரும்புகிறேன்.
இங்கு நான் நிற்பதற்கு முழு முதல் காரணம் என் அம்மாதான். அவரை நல்லபடியா நான் பார்த்துகொள்ள வேண்டும் என்று கண்ணீர் விட்டு உருக்கமாக பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி பேசினார்.
தற்போது இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் வருகை தரும் டாஸ்க் ஒன்று வந்தது. அப்போது வீட்டில் அம்மாவின் பாடல் ஒலிக்கும் போது மெல்ல கதவை திறந்து ரக்சிதாவின் அம்மா உள்ளே வந்தார். சில நாட்களாக அவள் அம்மாவை பார்க்காமல் இருந்த ரச்சிதா அவரை கண்டதும் ஓடி வந்து கட்டிப்பிடித்து அழ தொடங்கினார்.
இதை அடுத்து அவர் அம்மா நீ நன்றாக விளையாடுகிறாய் இதே போல் விளையாடு என்று அவருக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டை அம்மாவிற்கு சுற்றி காண்பித்து தன் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று அம்மா மடியில் நான் படுத்துக் கொள்ளவா என்று ஒரு குழந்தை போல கேட்டு கதறி அழுது அவள் அம்மா மடியில் படுத்து கொண்டார்.