கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு குணமாகி வீடு திரும்பினார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மின் துறை அமைச்சர் தங்கமணியை தொடர்ந்து கூட்டுறவு துறை அமைச்சர் ராஜுவுக்கு கடந்த ஜூன் 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் அன்பழகன் கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இன்று அமைச்சர் ராஜூ, கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.