தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்து வந்தது. இந்நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பிறகு பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடந்ததில் திமுக செய்தித்தொடர்பாளர் திரு இளங்கோவன் ஆர்.எஸ்.எஸ் மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா, இளங்கோவனின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து ஆத்திரத்துடன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் கற்கள் வீசப்படும் என்ற திமுக செய்தித்தொடர்பாளரின் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். தமிழகத்தில் கடந்த 4 வருடங்களில் 3 இடங்களில், 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் ஒரு இடத்திலாவது கற்கள் வீசப்பட்ட ஆதாரங்களை காட்ட வேண்டும் என அவருக்கு நான் சவால் விடுகிறேன். ஒரு ஆதாரமும் இல்லாமல் இதுபோன்று வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன்.
கடந்த நவம்பரில் 3 இடங்களில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை ஒவ்வொரு இன்ச்சாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். அதில் ஒரு இடத்தில் கூட வன்முறையோ, வேறு அசம்பாவிதமோ நடந்ததற்கான காட்ச்களை நீக்கள் பார்க்க முடியாது. ஒரு தேசிய தொலைக்காட்சியில் இதுபோன்ற பொய்யை முன் வைக்கலாமா?
இதற்கு 2017ம் ஆண்டுக்கு முன் ஊர்வலம் நடந்திருக்கமால் என இளங்கோவன் கூறிய நிலையில், 2017க்கு முன் பெரும்பாலான ஆண்டுகளில் ஊர்வலமே நடக்கவில்லை என சூர்யா விளக்கம் அளித்தார். கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டபோது, திமுக, விசிக கட்சியை அழைத்து அதே தேதியில் ஊர்வலம் நடத்தக்கோரி அறிவுறுத்தியது. இதனை மற்றொரு பக்கத்தில் நிராகரித்த அரசு, 2 ஊர்வலங்களையும் நிராகரித்து இருக்கிறோம். இதனால் நாங்கள் சார்புடையவர்கள் அல்ல என காட்ட விரும்பியது. இதுதான் அவர்கள் விரும்பும் விதம்.
அவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகத்தில் அனுமதி வழங்கவில்லை என்றால், தமிழக அரசு அவர்களுடைய சட்ட ஒழுங்கை நினைத்து வெட்கப்பட வேண்டும். திமுக உறுப்பினர்களே பட்டப்பலகில் கொலை செய்யப்படுகின்றனர். அதற்கும் அவர்கள் வெட்கப்பட வேண்டும். கடந்த ஆண்டுகளில் 3 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கொடுத்துள்ளதாக திமுக மார் தட்டிக்கொள்கிறது. உண்மையில் அது திமுக வழங்கவில்லை. அரசியல் சாசனமே எங்களுக்கு நேரடியாக ஊர்வலம் நடத்துவதற்கு உரிமையை வழங்குகிறது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஊர்வலம் நடத்தலாம் என்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெறாமல் தடுப்பதற்கு அரசு அழுத்தம் தருவதாக எங்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலீசுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸை தடுக்க விருப்பமில்லை. அவர்கள் கூட்டணி கட்சிகளை வைத்து பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். இந்த பிரச்சனைகளை சமாளித்து நாங்கள் 3 இடங்களில் ஊர்வலம் நடத்தினோம்.
இவ்வாறு எஸ்.ஜி. சூர்யா கூறினார்.