குறைந்த விலைக்கு டீசல் விற்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை.
ஸ்ரீபெரும்புதூரில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல் நேரடியாக தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
இந்த சிப்காட் பகுதிகளில் ஹூன்டாய், ரெனால்ட்நிஸான், டைம்லர், கோமாட்சூ போன்ற கார் மற்றும் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், ராயல் என்பீல்டு, யமஹா போன்ற இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதைத்தவிர வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும் ஏராளமாக இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளுக்கு தினமும் வந்து செல்கின்றன. அதே போல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக நூற்றுக்கணக்கான பேருந்து, வேன் மற்றும் கார்கள் இயங்கி வருகின்றன. ஆனால், குறைந்த விலைக்கே டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஏராளமான தொழிற்சாலை நிர்வாகங்களும் தங்களுடைய தொழிற்சாலைகளில் இயங்கி வரும் வாகனங்களுக்கு தொடர்ந்து லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல்களையே வாங்கி வருகின்றனர்.
இதைப்பற்றி கூறுகையில் “இப்பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் இயங்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இப்பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் அணுமதியளித்துள்ளன. நாங்களும் பல லட்சங்களை முதலீடு செய்து பெட்ரோல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில வாரங்களாக கிழக்கு கடற்கரைச்சாலையில் இயங்கி வரும் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களிலிருந்து, லாரிகள் மூலம் நேரடியாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடங்களுக்கே சென்று குறைந்த விலையில், சுமார் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லிட்டர் டீசல் வரை தினமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்படி நடப்பதால் எங்களின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என கூறியுள்ளனர்.