கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நிதின் கட்காரி விரைவில் குணமடைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோன பாகுபாடின்றி அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றது, இவ்வாறு இருக்க கொரோன அரசியல் தலைவர்களையும் சூரை ஆடுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, மாநில முதல் மந்திரிகள், மந்திரிகள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் என மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய மந்திரிகள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் தன்னை தனிமைபடுத்தி வைத்திருக்கிறார். இவர் சீக்கிரம் கொரோன தொற்றிலிருந்து குணமடைய ஸ்டாலின் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.