நிர்கதியாக வெளியில் திரிந்த குட்டி பூனை ஒன்றை, வீட்டிற்கு அழைத்து வரும் நாய் குறித்த வீடியோ, பார்ப்பவர்கள் கல்நெஞ்சக்காரர்களாக இருப்பினும், அவர்களது மனதை கரைய வைப்பதாக உள்ளது.
கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ள நிலையில், மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வீடுகளிலேயே இருந்து தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நாம் வீட்டில் தனியாக இருக்கும்போது, நமது மனதுக்கு இதமளிக்கும் விதமாக ஒரு வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ரெக்ஸ் சாப்மேன் என்ற டுவிட்டர்வாசி, இந்த வீடியோவை, டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவை பார்த்தால், ஹீரோக்கள் எல்லாம் எப்போதும் தொப்பி அணிந்து இருப்பதில்லை, அவர்கள், சிலநேரங்களில் சாதாரணமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாய் ஒன்று வீட்டின் முன்புற வழியாக உள்நுழைகிறது. அப்போது அதற்குபின், நிர்கதியாக தனித்து விடப்பட்ட குட்டி பூனைஒன்றும் அதனுடன் வருகிறது. நாய் வீட்டுக்குள் நுழைந்த உடன், அந்த குட்டி பூனையும் நுழைய முயற்சிக்கிறது. ஆனால், அதனால் முடியவில்லை. அது மேலே ஏறும்வரை, அந்த நாய் காத்திருந்து அது உள்ளே செல்கிறது. அதேபோல், வீட்டின் உள்ளே அது செல்ல முயற்சிக்கும் போதும், அது தீவிர முயற்சியின் முடிவிலேயே அது உள்நுழைகிறது.
இந்த வீடியோ, இதுவரை 2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாது, 1,28 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.