ரஷிய அதிபர் புதின், தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதின் பொது வெளியில் தோன்றினார்.
குண்டு வெடிப்பில் சேதம் அடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணி முடிந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை புதின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்றார்.