ஒரு சின்ன கிராமத்தில ஒரு ஏழ்மையான குடும்பத்தில பிறந்தேன். சின்ன வயசுல இருந்தே ரொம்ப சகிப்புதன்மை விட்டு குடுக்கிறது, எல்லா உறவுகளும் வேணும்னு நெனைக்கிறது, ஆனா என்னமோ கடைசில தனிமை தான் மிஞ்சுது.
கை கூட்டி எண்ணுற அளவுக்கு தான் நெருங்கிய நண்பர்கள். அதுவும் கொஞ்ச காலம் தான். அம்மா அப்பா வேலைக்கு போய்டுவாங்க யாரோ ஒருத்தர் வீட்ல வளந்தேன், தம்பி கூடவும் அதிகமா விளையாண்டது இல்ல, ஏன்னா அவனுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போயிடும்.
வெளில போய் விளையாண்டது இல்ல. சைக்கிள் பிடிக்க கூட யாரும் இருக்கமாட்டாங்க நானா கத்துக்கிட்டேன். எந்த பிரச்சனைனாலும் யார்கிட்டயும் சொல்லிக்க மாட்டேன். என்ன சுத்தி எல்லாரும் சந்தோசமா இருக்கணும்னு நெனச்சேன். அப்படி ஒண்ணும் நல்லா படிக்கிற பொண்ணும் கிடையாது average ஸ்டுடென்ட் தான். ஸ்கூல் முடிச்சதும் காலேஜ் என்கிட்ட யாரும் என்ன படிக்கிறன்னு கேக்கல, எதுல interest னு கேக்கல, வாங்கின மார்க் வெச்சு இன்ஜினியரிங் ல ஒரு course சேந்தாச்சு.
4 வருஷம் படிப்பு முடிக்க பேங்க் ல லோன். அந்த லோன் நானே கட்டணும்னு ஆசைப்பட்டேன், நல்ல வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டேன். படிக்கும் போது காதல், அந்த காதல் வாழ்க்கைல நான் ஆசை பட்டதெல்லாம் கிடைக்கும்னு ஒரு எண்ணம்.
வேலைக்கும் போனேன் ஆனா அந்த வேலைய வாங்கிறதுல அவ்வளவு போராட்டம். இதுக்கு மத்தில ஒரு பொண்ணா பிறந்தா அதுவும் வயசுக்கு வந்துட்டா அவ படர அவஸ்தை கொஞ்சம் நஞ்சம் இல்ல. எத்தனை abuse. அப்பவும் வெளில சொல்ல முடியாது, சொன்னா abuse பண்ணவன விட்ருவாங்க. நீ தான் dress ஒழுங்கா போட்ருக்க மாட்ட அப்படினு ஒரு பொண்ண தான் blame பண்ணுவாங்க.
எல்லாத்தையும் தாண்டி வேலைக்கு போயாச்சு சம்பளம் இல்லாம 6 மாசம் வேலை செஞ்சு ஏழாவது மாசம் சம்பளம் 6000 ரூபாய் கையில வாங்கும் போது இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு பலன் நெனச்சேன். அதுவும் ஓடுச்சு 3 வருஷம் ஆனா bank லோன் கற்ற அளவுக்கு சம்பாரிக்கல, ஒருவேள வேலைய விடாம இருந்திருந்தா லோன் கட்டிருக்க வாய்ப்பு இருக்கு. அதான் காதல் கண்ண மறச்சிருச்சே .
கல்யாணம் பண்ணா போதும்னு இருந்தது. வாழ்க்கைலயே நான் ஆசைப்பட்டு கிடைச்ச ஒரு விஷயம் காதல் கல்யாணம். எனக்கு பிடிச்சவன் கைய பிடிச்சது. அதே சமயம் நான் பண்ண தப்பு என் வேலைய விட்டது.
இனி வாழ போற ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்காகவும் அவன் குடும்பத்துக்காகவும் இருக்கணும்னு நெனச்சேன். அவன் என்னை பாத்துப்பான் இனி நமக்கு எந்த கவலையும் வேணாம்னு தான் இருந்தேன்.
ஆனா நான் நெனச்சது தப்பு, சூழ்நிலை மனுசன எப்படி வேணாலும் மாத்தும். அதுக்கு நான் கை பிடிச்சவன் தான் உதாரணம். என்னோட சாய்ஸ் correct னு ரொம்ப நாள் திமிரா அலைஞ்சேன். Abuse இந்த சின்ன வார்த்தைக்குள்ள எவ்ளோ வலி இல்ல..
ஸ்கூல் படிக்கும் போது, காலேஜ், job னு துரத்துது, கல்யாணதுக்கு அப்புறமும் இருக்கிறது தான் ரொம்ப கொடுமையான ஒரு விஷயம், இப்பவும் அதுக்கான நீதி கிடைக்காதது இன்னும் அதிர்ச்சி..
இவன் கை பிடிச்சு இவன நம்பி வந்து இவனுக்காகவே வாழ்ந்துட்டு இருக்க எனக்கு என்னை மிஞ்சுச்சு. அன்பான காதலன் காக்கும் கணவன் ஆனா குடும்பம்னு வந்துட்டா அதுல நான் இல்ல.
இப்பவும் தனிமை தான் என் உறவு. என்னை abuse பண்ணானு தெரிஞ்சும் அவனை வீட்ட விட்டு வெளில போடா நாயே அப்படினு சொல்ல வாய் வரல.
ஆனா நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாம என்னை போடி னு ரொம்ப ஈஸியா சொல்லிட்டான். அவன் வாழ்க்கையில நான் அவ்ளோ தானா. இத்தனை நாள் நான் வாழ்ந்ததுக்கு என்ன அர்த்தம், நான் என்ன பண்ணேன்.இன்னிக்கு அவனுக்கு கை நிறைய சம்பளத்தோட ஒரு வேலை வாங்கி குடுத்திருக்கான். ஆனா நான் financial independent இல்லாம தவிச்சுட்டு இருக்கேன்.
என்ன இருந்தாலும் நான் வேற ஒருத்தி தானு சொல்லாம சொல்லிட்டான்.
வாழ்க்கையில இந்த சம்பவத்தை என்னால மறக்கவே முடியாது. ஆனா நான் வளருவேன் வளரனும் எப்படி னு தெரியல ஆனா வளரனும்.
ஒரு பொண்ணு நிம்மதியா வாழணும்னா அவளுக்கு தேவையான விஷயங்கள் என்ன தெரியுமா
அவளை நம்புங்க, சுதந்திரமா முடிவு எடுக்க விடுங்க, அவ ஒரு பிரச்சனைனு சொன்னா காது குடுத்து கேளுங்க, உண்மையான அன்பு குடுங்க,
அவ வாழ்க்கை மட்டும் இல்ல அவளை சுத்தி இருக்கவங்களோட வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும்.
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அவதாரம். அவதாரத்த தேடி கோயிலுக்கு போகாம வீட்ல இருக்க அவதாரத்த சந்தோசமா வெச்சுக்க முயற்சி பண்ணுங்க.
நீங்க விரும்பினத விட வாழ்க்கை அழகா இருக்கும்.
***************************