கூட்டுக்குடும்பத்தினை விட்டு பணிக்கான வெளியில் செல்லும் பெற்றோர்களுக்கு குழந்தைகளினை எவ்வாறு பராமரிப்பது, அவர்களுக்கு என்ன உணவினை தரவேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
குழந்தைகள் அனைவரின் வீட்டில் மகிச்சியையும் ஏற்படுத்தும் ஒரு மகத்தான பொக்கிஷம். முன்பெல்லாம் கூட்டுக்குடும்பத்தில் உறவினர்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது பெரியவர்களுக்கு தெரியும். ஆனால் தற்போதுள்ள இயந்திர உலகில் தனிக்குடும்பத்தில் வைத்துக்கொண்டு, அதிலும் பணிக்கு செல்லும் பெற்றோர்களாக இருந்தால் சொல்லவே தேவையில்லை அவர்கள் படும் சிரமம். இந்த சூழலிலும் ஒரு வயதுடைய குழந்தைகளை வைத்து அவர்கள் பராமரிக்கும் போது என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே பலருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பும்.
தாய் வயிற்றிலிருந்து குழந்தை வெளியே வந்தவுடன் தாய்ப்பால் என்பது அவர்களுக்கு கிடைத்த சிறந்த நோய் எதிர்ப்புசக்தி உடைய உணவு. இதன் காரணமாக குழந்தை பிறகு 6 மாதங்கள் வரை தாய்ப்பாலினை தவிர குழந்தைகளுக்கு வேறு எதுவும் தரக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இது மட்டுமில்லாமல் தாய் – குழந்தை இடையேயான பாசப்பிணைப்பும் மேலும் அதிகமாகும். எனவே 6 மாதக்காலத்திற்கு குழந்தை புதிய உணவு முறையினை நடைமுறைப்படுத்தும் போது என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
தேன் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களில் தேன் என்பது மருத்துவ குணம் நிறைந்த ஆரோக்கியமான ஒன்றாகும். இதனை குழந்தைககளுக்கு வயிற்றுப்பிரச்சனை ஏற்பட்டால் சிறிது எடுத்து அவர்களுக்கு கொடுப்பார்கள். இருந்தாலும் இதில் பாக்டிரியாவான குளோஸ்ட்ரிடியம் போட்லினம் அதிகளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. இதில் உள்ள போட்லினம் என்பது நச்சுத்தன்மையை உருவாக்குகிறது. இந்த நச்சுத்தன்மை குழந்தைக்கு சோம்பலை உண்டாக்குவதோடு, தசைகளை பலவீனப்படுத்தும் மற்றும் குழந்தைக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் எந்நேரமும் குழந்தை எரிச்சலுணர்வையும், தலைச்சுற்றல் அறிகுறிகளுடனும் இருக்கும். இது ஒரு அரிய நோய்த்தொற்று தான். ஆனால் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு தேனினை கொடுக்கும் போது அதிகளவு பாதிப்பினை அவர்களுக்கு ஏற்படுத்தும். இதன் காரணமாக ஒரு வயது முடியும் வரை குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்
மாட்டுப்பால்
குழந்தைகளுக்கு 6 மாதகாலம் வரை தாய்ப்பாலினை நிச்சயம் கொடுக்க வேண்டும்.ஆனால் ஒரு சில தாய்மார்களுக்கு பால் அதிகளவில் சுரக்காது. இதன் காரணமாக அடுத்தப்படியாக அவர்களின் பசியினைப்போக்க மாட்டுப்பாலினை குழந்தைகளுக்கு தர முயல்வார்கள். ஆனால் இதனை ஒருவயது வரை குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாலில் கொடுங்கள். ஏனெனில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையால் மாட்டுப் பாலில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் நொதிப் பொருட்களை செரிமானம் செய்ய முடியாது மற்றும் அதில் உள்ள கனிமச்சத்துக்கள் குழந்தையின் சிறுநீரகங்களில் பாதிப்பை உண்டாக்கும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் முழுமையாக நிறைந்துள்ளது. எனவே இதை மிதமான அளவில் கொடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு முட்டையினால் உடல் ஒவ்வாமையால் உடனடியாக முட்டை கொடுப்பதை பெற்றோர்கள் நிறுத்திவிடவேண்டும்.
கோதுமை உணவுகளை குழந்தைகளுக்கு என்னவாகும்?
கோதுமை உணவுகளை நன்கு கூழாக்கி கொடுக்க வேண்டும். அதுவும் 7-8 மாதங்கள் முடிவடைந்த பிறகு தான் குழந்தைகளுக்கு தர வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாக குழந்தைகளுக்கு இதன் மூலம் அழற்சி எதுவும் ஏற்படுகிறதா? என்பதை சோதித்துக்கொள்ள வேணடும். மேலும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பிரச்சனையும் கோதுமை உணவினால் ஏற்படக்கூடும் . எனவே பெற்றோர்கள் இந்த உணவினை கொடுக்கும் போது கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை கொடுத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பா?
சர்க்கரை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வயதாகும் வரை அவர்களின் உணவுப்பட்டியலில் நிச்சயம் இருக்கவே கூடாது. அதனை மீறியும் அவர்களுக்கு தருவதால் பசியின்மை ஏற்படும். இதனால் மற்ற எந்த உணவுப்பொருட்களையும் அவர்களால் உட்கொள்ள முடியாது. மேலும் இதில் புற்றுநோயினை உண்டாக்கக்கூடிய உணவுப்பொருள் என்பதால் குழந்தைகளுக்கு இதனை தவிர்ப்பது நல்லது. வேண்டும் என்றால் மண்டவெல்லாம், கருப்பட்டி, நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை இனிப்பு சுவைக்காக பயன்படுத்தலாம்.’
வேர்க்கடலை
வேர்க்கடலை வேர்க்கடலை ஆரோக்கியமான மற்றும் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். ஆனால் வேர்க்கடலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கக்கூடியது. எனவே வேர்க்கடலையை குழந்தைக்கு கொடுக்க நினைத்தால், ஒரு வயது ஆகாமல் கொடுக்காதீர்கள்.
கடல் உணவுகள்
கடல் உணவுகளில் குறிப்பாக இறால், நண்டு போன்றவை குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கும். உங்கள் குழந்தைக்கு கடல் உணவுகளைக் கொடுக்க நினைத்தால், ஒரு வயதிற்கு மேல் கொடுங்கள். சில மீன்களான டூனா, சுறா மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றில் மெர்குரி அதிகம் உள்ளது. மெர்குரி அதிகம் உள்ள எந்த உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்கக்கூடாது. அப்படி கடல் உணவுகளை குழந்தைக்கு கொடுப்பதாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு பிறகு கொடுங்கள்.
குழந்தைகளை 10 மாதம் சுமக்கும் போது இருக்கும் கவனிப்பினை விட 10 மடங்கு கூடுதல் கவனத்தினை அவர்களை பராமரிப்பதில் காட்ட வேண்டும். இல்லாவிடில் தேவையான உணவுகளை சாப்பிட்டு குழந்தைகள் படும் கஷ்டத்தினை பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே முடிந்தவரை குழந்தைகளின் ஆரோக்கியத்தினை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான உணவு முறையினை இனிவரும் காலங்களில் எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு முடிந்தவரை 1வயது வரையினாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதினை தாய்மார்கள் மறந்துவிடாதீர்கள்