நம் உடலில் ஹீமோகுளோபின் அளவை இயல்பு நிலையில் வைத்திருப்பதனால், உடல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.என்னன்ன உணவுகள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும் என்பதை பார்ப்போம்.
நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஹீமோகுளோபின் மிகவும் தேவையானது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை, தலைவலி, மயக்கம் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன.
அதிலும் முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தின் அளவானது அதிகமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். பல கர்ப்பிணி பெண்களைக் குறி வைத்து தாக்குவதே இந்த இரத்த சோகை தான். மேலும் உணவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக் கூடாது. முக்கியமாக காலை உணவை தவிர்க்காமல் இருப்பது நல்லது.
இந்த பகுதியில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளை பற்றிக் காணலாம்.
பேரீச்சை
பேரீச்சையில் கலோரிகள், இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். கால்சியம் சிறிதளவு இருப்பதால் எலும்பு, பற்களுக்கும் மிகவும் நல்லது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
கருப்பு உலர் திராட்சை
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். அடுத்த நாள் காலையில் பழத்தை தின்றுவிட்டு, பழம் ஊறிய தண்ணீர்யும் குடியுங்கள். இது போன்று செய்து வந்தால் இரத்தம் அதிகரிக்கும்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்
உடலில், இரும்புச் சத்து குறைபாடினால், ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும். கீரை வகைகள், முட்டை, பூசணி, பீட்ரூட், சிக்கன் கல்லீரல், பேர்ச்சம்பழம், பருப்பு வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.முக்கியமாக பெண் பிள்ளைகளும், கர்ப்பிணிகளும் இதில் கவனம் கொள்ள வேண்டும்.
மாதுளை
மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.இதை தினமும் பெண் பிள்ளைகளுக்கும் கொடுப்பது மிகவும் அவசியம்.
வைட்டமின் சி
வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளான பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும்.