திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். 80 வயதாவதால் கொரோனா காலத்தில் அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. கொரோனா குறையத் தொடங்கிய பிறகு முகத்தை முழுவதும் மூடும் கவசம், மாஸ்க் ஆகியவற்றை அணிந்தே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவராக உள்ள துரைமுருகன், குழு உறுப்பினா்களுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வளா்ச்சிப் பணிகள் குறித்து நேற்று ஆய்வு நடத்தினார்.
read more: போராடும் விவசாயிகள் தரகர்களா? முதல்வருக்கு ஸ்டாலின் எதிர்ப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, திருச்சி வழியாக காரில் சென்னை சென்றுகொண்டிருந்தார் துரைமுருகன். அப்போது அவருக்கு லேசான காய்ச்சல், உடல் சோா்வு ஏற்பட்டது. இதையடுத்து தென்னூா் பட்டாபிராமன் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். அதன்பின்னர் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
2010ஆம் ஆண்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.