பாஜகவிற்கு ஆதரவாக இணைந்த பிரபல நடிகர்

பாஜகவிற்கு ஆதரவாக இணைந்த பிரபல நடிகர்

அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள கர்நாடகாவில் ஆளும் பாஜக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக பிரபல நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார். கிச்சா, நான் ஈ, புலி, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய திரையுலகின் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் சுதீப். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அலைகள் பெருகி வருவதை கண்டா பாஜக அங்கு பிரபலமான நடிகர்களை அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்தது. அதன்படி நடிகர் சுதீப்பை அணுகிய பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சுதீப், பாஜக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளார். இதனை செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர். கர்நாடக திரையுலகில் உச்சத்தில் உள்ள நடிகர் தர்ஷன் விரைவில் பாஜக-வில் இனைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆளும் பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு திட்டங்களை வகுத்து வருகின்றன. கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *