எம்பிபிஎஸ், பிடிஎஸ் ( பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 6) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை தமிழகத்தில் இருந்து 1.05 லட்சம் பேர் வரை நீட் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.