இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருகிறேன் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர நிலையில் அரசியல் களங்கள் சூடுபிடிக்க தொடங்கியது. ஆளும் கட்சிகள் முதல் எதிர் கட்சிகள் வரை வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசியல் களம் காண்போம்’ என தனது நிலைப்பாடு குறித்து ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் என்ற பெயரில், சென்னை ஆதம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அதில் கலந்து கொண்டு பேசிய சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியதாவது,
Read more – ஆரஞ்சுக்கு பதிலாக கறுப்பு நிறத்தில் கேரட்
ஊழலை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும்.இளைஞர்கள் அனைவரும் புதிய சமுதாயத்தை படைக்கவேண்டும். ஊழலுக்கு எதிராக லட்சியத்தோடு போராடுவோம். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.