புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் என். ஆர். காங்கிரஸில் இணைந்தார்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் உள்பட அடுத்தடுத்து 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் முதல்வர் பதவியில் இருந்தும், அமைச்சரவையும் கூண்டோடு ராஜினாமா செய்வதாகவும் ஆளுநரிடம் நாராயணசாமி கடிதம் தந்தார். அதனைத்தொடர்ந்து, புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
Read more – காங்கிரஸ் கட்சியை நொறுக்கிய பா.ஜ.க : குஜராத் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி
இந்தநிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் என். ஆர். காங்கிரஸில் இணைந்தார். ஏற்கனவே இரண்டு எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.