தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோன நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில், நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் சுற்றுலாத் தலங்கள், நீச்சல் குளங்களுக்கு தடை தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த கொரோன தற்போது தன் தாக்கத்தை குறைத்துள்ளது, இந்நிலையில் பண்டிகையை முன்னிட்டு அணைத்து இடங்களிலும் மக்கள் போக்குவரத்துக்கு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கோவை – 113, திருவண்ணாமலை – 49, திருவாரூர் – 41, காஞ்சிபுரம் – 29, சென்னையில் 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.