எபோலா, மெர்ஸ் போன்ற வைரஸ்கள் குறித்து பல காலம் ஆய்வில் ஈடுபட்டிருந்தததால், வேகமாக கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார், கொரோனாவிற்கு உலகின் முதல் தடுப்பு மருந்தான Sputnik V ஆராய்ச்சியில் ஈடுபட்ட தலைமை ஆய்வாளர் அலெக்ஸ்சாண்டர் கின்டஸ்பெர்க்.
5 மாதங்களில் இதை கண்டுபிடித்திருந்தாலும், நாங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஒரு தலைமுறை விஞ்ஞானிகளே இதற்காக 20 ஆண்டுகள் உழைத்துள்ளனர். வைரஸ்களுக்கு எதிராக ஆறு மருந்துகளை கண்டுபிடித்ததாகவும், சமீபத்தில் எபோலாவுக்காக GamEvac-Combi எனும் மருந்தையும் கண்டுபிடித்துள்ளனர். அதன் அனுபவத்தின் மூலமே இவ்வளவு சீக்கிரமாக எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புடின், உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதிலும் இருந்து இவ்வளவு அவசரமாக ஏன் வெளியிட வேண்டும்? 3ம் கட்ட சோதனை செய்யாமல் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என விமர்சனங்கள் எழுந்த நிலையில் தலைமை ஆய்வாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.