இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.
கொரோன தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தேடல் தொடர்ந்து நடந்துவருகிறது. அதன்பேரில் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இப்போது சாதகமான முடிவுகளை வழங்கியுள்ளன. ஃபைசர் இன்க் மற்றும் மாடர்னா இன்க் ஆகியவற்றின் ஊக்கமளிக்கும் சோதனை முடிவுகள், அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி போன்ற போட்டியாளர்களுக்கு ஒரு உயர்வை கொடுத்து உள்ளன. இன்னும் விரைவில் அவற்றின் முக்கிய அறிக்கைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு முடிவுக்குள் 2 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து தீரவேண்டும் என திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மருந்து நிறுவனமான மாடர்னா கூறியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவேண்டும் என அமெரிக்காவின் மற்றொரு பன்னாட்டு மருந்து நிறுவனமான ஃபைசரும் தெரிவித்தது.
இந்த இரண்டு தடுப்பூசிகளும் தலா இரண்டு முறை போடப்படக்கூடிவை என்பதால், இந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் மூன்றரை கோடி பேருக்கு தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாடர்னாவின் கொரோன வைரஸ் தடுப்பூசிகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது என தெரியவந்துள்ளது. இது மனித உயிரணுக்களை ஹேக் செய்ய “மெசஞ்சர் ஆர்.என்.ஏ” என்ற மூலக்கூறின் செயற்கை பதிப்பை பயன்படுத்தி வருகின்றது. மேலும் இந்த கம்பெனி 13 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய ஃபைசரும், 50 முதல் 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க தீர்மானித்துள்ளது.