பருவநிலை மாற்றம் குறித்தும் மற்றும் பனிப் பிரதேசங்களில் ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆய்வாளர் ஒருவர் பனிமலையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் அங்கேயே பலியனார்.Konrad Steffen எனும் இந்த விஞ்ஞானி பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்வதில் உலகின் தலைசிறந்தவராக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த பனிப் பிரதேசங்களில் ஆய்வில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிக், அண்டார்டிக் மற்றும் கிரீன்லாந்து தான் இவரது முக்கிய ஆய்விடங்களாக இருந்துள்ளன. பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என முதன்முதலில் தெரிவித்தவர் இவர் தான்.
கிரீன்லாந்தில் உள்ள ஒரு ஆய்வு முகாமான சுவிஸ் முகாம் அருகில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பாறை பிளவினால் அவர் பனிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என தெரிகிறது. அவரது உதவியாளர் கூறுகையில் இந்த இடத்தில் பனிப்பாறை பிளவு இதுவரை ஏற்பட்டதே இல்லை. ஒருவேளை அதிக வெப்பம் காரணமாக பிளவு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்ததார்.
புவி வெப்பமயமாதல் குறித்து ஆராய்ந்த ஸ்டெபன் கடைசியில் அதனாலேயே உயிரிழந்ததற்கு பலரும் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.