ஆஸ்திரியாவை சேர்ந்த டோம்னிக் தீம் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டோம்னிக் தீம் மற்றும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் நேருக்குநேர் மோதி கொண்டனர்.
முதல் செட்டை 6-2 என ஸ்வெரேவ் எளிதில் கைப்பற்றி இரண்டாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் தன் வசம் வைத்துக்கொண்டார்.
மூன்றாவது செட்டில் இருந்து தீம் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 வது செட்டை 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து 4 வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் தீம் ஆக்ரோஷமாக ஆடி செட்டையும் 7-6 எனக் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என ஸ்வெரேவை வீழ்த்தி டோம்னிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தப் போட்டி 4 மணி நேரம் நடைபெற்றது. முதல் 2 செட்களை இழந்தாலும் அடுத்தடுத்த ஆட்டத்தில் டோம்னிக் தீம் வென்று பட்டத்தை தன் வசமாக்கினார்.