ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் 283 பேர் பதிவு செய்து இருக்கின்றனர்.
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு இதுவரை 1,097 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள். இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்து இருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்றது. இந்தநிலையில், 14வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. ஐ.பி.எல் ஏலத்துக்கான வீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், ஆஸ்திரேலியா – -42 வீரர்கள், வங்காள தேசம் – 5 வீரர்கள், இங்கிலாந்து – 21 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், இதுதவிர நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் , அமெரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.