நடராஜனை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரும்,ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா :
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நிலைகளிலான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த இருபது ஓவர் போட்டியில் இடதுகை பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடரில் தமிழக வீரர் நடராஜனின் பந்து வீச்சானது சிறப்பான அமைந்தது. மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார்.
நடராஜனின் இந்த வெற்றி நடைக்கு முக்கிய காரணமாக இருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்,நடராஜன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,வெற்றியோ,தோல்வியோ,அல்லது ஆட்டம் சமநிலையில் அமைந்தாலும் எங்களுக்குள் மைதானத்தின் உள்ளே மற்றும் வெளியே வீரர்களுக்குள் நல்ல மரியாதையை இருக்கிறது.
ஆஸ்திரேலியா சுற்று பயணத்தில் வலை பந்துவீச்சாளராக வந்த நடராஜன் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அவரை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.நடராஜனின் இந்த சாதனை மிக பெரியது என்றார்.மேலும் அவர் நடராஜன் எப்பொழுதும் அமைதியாக களத்தில் இருந்து,விளையாட்டை எந்த சூழ்நிலையிலும் ரசித்து விளையாடுவர் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அடுத்து நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு நடராஜன் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என்று கூறியது குறிப்பிடத்தக்கது.