கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாய்:
ஐ.பி.எல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களாக பட்லர்,கேப்டன் ஸ்மித் இருக்க,ஆரம்பம் முதல் ராஜஸ்தான் அணி விக்கெட்களை இழந்து கொண்டு இருந்தது.கடைசி நேரத்தில் டாம் கர்ர்ன் மட்டும் ஒரு முனையில் போராடி அரை சதத்தை கடந்தார்.
20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியில் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்களை வீழ்த்திய கொல்கத்தா அணியின் இளம் வீரர் சிவம் மாவிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்க பட்டது.