பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சால் கொல்கத்தா 112 ரன்களில் சுருண்டது
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் தொடர் இன்றைய 28 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பெங்களூர் அணி சார்பாக பட்டிகல்,பின்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.டி வில்லியர்ஸின் அதிரடி அரைசதத்தால் கொல்கத்தா அணிக்கு 195 ரன்கள் இலக்காக வழங்கியது பெங்களூர் அணி.
தொடக்க வீரர்களாக சுப்மன் கில்,பாண்டன் களம் இறங்கினர்.சைனி ஓவரில் பாண்டன் 8 ரன்களில் வெளியேற,அடுத்து வந்த ராணாவும் 9 ரன்களில் வெளியேறினார்.ஓரளவு அடித்து ஆடிய சுப்மன் கில் தேவையில்லாத ரன் அவுட் ஆகி 34 ரன்களுடன் நடையை கட்டினார்.பின்னாடியே வந்த மோர்கன்,கேப்டன் தினேஷ் கார்த்திக் ஒரு இலக்க ரன்களோடு வெளியேற,ரசல் இறங்கி 2 பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்த முயற்சித்த ரசல்(16 ரன்கள்,10 பந்துகள்) உடானா வீசிய 14 வது ஓவரில் சிராஜ்ஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்தடுத்து கம்மின்ஸ் மற்றும் திரிபாதி வெளியேற,17 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.19 வது ஓவர் வீசிய கிறிஸ் மோரிஸ் பந்தில் நாகர்கோட்டி 4 ரன்களில் கிளீன் போல்டானார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவ,பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணியின் இமாலய வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த டிவில்லியர்ஸ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.