திவாதியா,பராக் கடைசி நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்த,ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் 3.30 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து மனிஷ் பாண்டேவின் அரைசதத்தால் ஹைதராபாத் அணி 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்து அடுத்தடுத்து ஸ்டோக்ஸ்,கேப்டன் ஸ்மித் மற்றும் பட்லர் விக்கெட்களை பறிகொடுக்க,சஞ்சு சாம்சன் உடன் இணைந்த உத்தப்பா கூட்டணி ஓரளவு அடித்து ஆட,ராஜஸ்தான் அணி 50 ரன்களை கடந்தது.
ரஷித் கான் வீசிய 10 வது ஓவரில் உத்தப்பா(18 ரன்கள்,15 பந்துகள்) L B W ஆகி நடையைக்கட்ட,ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 67 ரன்களுடன் தடுமாறியது.நிலைத்து நின்று ஆடிய சஞ்சு சாம்சன் .ரஷித் கான் வீசிய 12 வது ஓவரில் விக்கெட் கீப்பர் பேரிஸ்டவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,ராஜஸ்தான் அணியின் நிலைமை மோசமானது.கலீல் அகமத் வீசிய 16 வது ஓவர் இறுதியில் பராக் ஒரு சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் அணி 100 கடக்க உதவி செய்தார்.
அடுத்த ஓவர் வீசிய சந்தீப் சர்மா பந்தில் திவாதியா தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடிக்க,மறுமுனையில் பராக் அதே ஓவரில் 2 பௌண்டரிகளை ஓட விட்டார்.18 பந்துகளில் 36 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவையாக இருக்க,திவாதியா ரஷித் கான் பந்தில் அடுத்தடுத்து 3 பௌண்டரிகளை தெறிக்க விட்டார்.19 வது ஓவர் வீசிய நடராஜன் பந்தில் திவாதியா ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்தார்.ராஜஸ்தான் அணிக்கு 6 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்க,கலீல் வீசிய 4 பந்துகளில் 6 ரன்கள் ஓடி எடுக்க,அடுத்த பந்து பராக் ஒரு சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்தார்.
ராஜஸ்தான் அணியில் திவாதியா 45 ரன்களுடனும்,ரியான் பராக் 42 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அகமத்,ரஷித் கான் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.