தமிழ்நாடு கிரிக்கெட் நலசங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல். என அழைக்கப்படுகிற தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது 2016-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. நகரங்களில் உள்ள அனைத்து வீரர்கள் மட்டுமில்லாமல் கிராமப்புற அளவிலான திறமையான வீரர்களையும் அவர்கள் திறமைகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டித்தொடர் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரையில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியுள்ளது. கோவையில் நடைபெறும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டு. இதில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.