தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர்,கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடியக் கன மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, இன்று இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.5 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும்.எனவே வரும் 6-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *