ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ரக்ஷா பந்தனும் ஒன்று ஆகும்.
சகோதரிகள், சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்ஷா பந்தன் பண்டிகை, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நமது நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் மரியாதைக்குரிய @அமிர்தானந்தமாயி ஜி, உங்கள் சிறப்பு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களால் நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன்.நமது பெரிய தேசத்திற்கு உழைப்பது எனது பாக்கியம். உங்களிடமிருந்தும், இந்தியாவின் நாரி சக்தியிலிருந்தும் கிடைக்கும் ஆசீர்வாதம் எனக்கு மிகுந்த பலத்தைத் தருகிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் அவை மிக முக்கியமானவை எனப் பதிவிட்டுள்ளார்.