சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், கார்த்தியின் தந்தை சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்திக்கிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உள்ளதால், டாக்டர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, கார்த்தியின் தந்தை சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கார்த்தி சிதம்பரம் MP-க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனவும், தானும் நலமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.