எதிர்வரும் காலங்களில் வடகிழக்குப் பருவமழை பெருமழை உருவாகும் வாய்ப்பு ஏற்படும் நிலை இருப்பதால் சென்னையில் உள்ள பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
புவி வெப்பமயம் உருவாகி வருவதால் எதிர்வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழையின் மூலம் அதிக மழை பெய்ய வாய்ப்பு நிலவுவதாகவும், தாழ்வான 3 முதல் 6 அடி வரையில் நீரில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வாளர்கள் இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்ற வருடம் சென்னையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்டஆய்வில் எதிர்வரும் காலகட்டங்களில் 2015-ஆம் ஆண்டைப்போல பெரு வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும்,அவ்வாறு ஏற்படும் பெரு வெள்ளத்தால் மணலி, திருவொற்றியூர், சிந்தாதிரிப்பேட்டை, பெரியமேடு, பட்டாளம், கொசப்பேட்டை, மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகள் 3 அடி, 6 அடி நீரில் மூழ்கும் என்றும்,
இதேபோல் அண்ணாநகர், ஷெனாய்நகர், அமைந்தகரை,பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய பகுதிகள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஆனது அந்தப் பகுதிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதைப்பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கையில், சென்ற ” 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம் பாதிப்பு சென்னையில் ஏற்பட்டிருந்தாலும்,அது 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கர்நாடகம் மற்றும் ஆந்திர உடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் மிகச்சிறிய அளவில் தான் வடகிழக்கு மழை பெய்துள்ளது எனவே இந்த ஆண்டு மழை சராசரி அளவாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.