சென்னையில் நாளை முதல் கூடுதல் நேரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு ஊரடங்கால், நாடு முழுவதும் மெட்ரோ ரயில்சேவை 5 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட அன்லாக் விதிமுறைகளின்படி, மத்திய அரசின் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் கடந்த 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.
அதன்படி, முதற்கட்டமாக சென்னையில் காலை 7 முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணி நேரம் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வர உள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், பயணிகள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.