தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மைய வளாகத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!

தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மைய வளாகத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!
தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 2லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் இருப்பினும் “டிஸ்சார்ஜ்”ஆகுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும் முன்களத்திலிருந்து வேலை செய்யும் நபர்களான டாக்டர்கள், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், செய்தியாளர்கள் போன்றோருக்கு கொரோனா நோயின் பரவல் அதிகமாக உள்ளது.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மைய வளாகத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *