முழு ஊரடங்கான ஞாயிறன்று, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து இரவு ஊரடங்கு அமல்ப்படுத்தபப்ட்டுள்ளது. இதற்கிடையில் நாளை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஞாயிறன்று அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்படும்.
இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.