குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை :
கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபையின் கூட்டத்தொடரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகத்தில தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி அவற்றை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபைக்குள் கொண்டு சென்றனர்.
அவர்களது இந்த செயல் விதிமுறைகளை மீறியதாக கூறி பேரவை உரிமை மீறல் குழு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம் நோட்டீசை ரத்து செய்தது. அதன்பிறகு மீண்டும் ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் குழு புதிய நோட்டீசை சமர்ப்பிக்க, அதற்கு எதிராகவும் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.
Read more – தி.மு.கவில் முட்டிமோதும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் : மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைப்பு
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தீர்ப்பு ஒன்றை வழங்கினார். அதில் உரிமை குழுவின் 2 வது நோட்டீசை ரத்து செய்வதாக அறிவித்து காரணங்களின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற ஒரே ஒரூஉ காரணத்திற்காக மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது :
முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயர் நீதிமன்றம். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர் நீதிமன்றம்.
இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது! குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.