தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 பேர் குணமடைந்தும் உள்ளனர். 46 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தநிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக இருந்து வருகிறது. வீட்டில் இருந்து யாரால் வேலை பார்க்க முடியுமோ அவர்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்து வேலைப்பார்க்கலாம். அரசு உத்தரவிற்கு காத்திருக்க தேவையில்லை என்று தெரிவித்தார்.
Read more – வாக்கு எந்திரத்தில் கோளாறு என்று சொல்லுபவர்களுக்கே கோளாறு : பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் தற்போது வரை முழு ஊரடங்கு பிறப்பிக்க சாத்தியக்கூறு கிடையாது. வெண்டிலேட்டர் தேவையான அளவு இருக்கிறது. இன்னும் 2 வாரங்கள் மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த 2.39 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.