வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. அதனால், கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு,நாமக்கல், திருச்சி, தர்ம்புரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டதுடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக ராசிபுரத்தில் 20 செ.மீ மழைபெய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.