அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு

அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு

அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பிளஸ் 1 வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும் என்றும். அப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்திருந்தால் அம்மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பின் தங்கிய மற்றும் நலிவடைந்த குடும்ப மாணவர்கள் படிக்கும் படிப்புகளை பள்ளிக்கல்வித்துறை மூடி வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *