கோயம்பேடு சந்தைக்கு 135 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் பண்ணை பசுமை கடைகளில் ரூ. 45 க்கு விற்பனை செய்வதாக தகவல்.
கிலோ நாட்ட்டில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்குக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் குறைந்துள்ளதாக நேற்று மக்களிடம் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் வருடம் தோறும் வெங்காயத்தில் விலைவிண்ணைத் தொடும் வகையில் கிலோவுக்கு ரூ. 100 முதல் ரூ. 110 வரை உள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து தினமும் 30 லாரிகளில் இருந்து மட்டுமே வெங்காயம்கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் தான் பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 100 முதல் ரூ. 110 வரை உள்ளது என தகவல் வெளியாகிறது.
எனவே விலையைக் குறைக்க தமிழக அரசு எகிப்தில் இருந்து 135 டன் பெரிய வெங்காயை இறக்குமதி செய்துள்ளது. இதன் விலை கிலோ ரூ. 50 லிருந்து ரூ. 60 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றுமுதல் பண்ணை பசுமை கடைகளில் ரூ. 45 க்கு விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.