மாஸ்க் அணியாமல் இனி வாகனம் ஓட்டி வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த தொற்றினை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
Read more – மத்திய பல்கலைக்கழகத்தில் சேர இனி நுழைவுத்தேர்வா ? மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டம்..
இந்தநிலையில், மாஸ்க் அணியாமல் இனி வாகனம் ஓட்டி வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அவசரமாக வெளியே செல்வோர் முக கவசத்தை மறந்துவிடாமல் இருக்க ஒன்றுக்கு 2 என்ற கணக்கில் சுத்தமான முகக்கவசங்களை வாகனத்தில் வைத்து கொள்ளுங்கள் என்றும், இந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளனர்.