தமிழகத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 12 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 63,412 பள்ளி சத்துணவு மையங்களில், சுமார் 41 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், காலியாக உள்ள 12 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என காலியாக பணியிடங்கள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்த தகுதி வாய்ந்த நபர்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்கும் பொருட்டு, சென்னை நீங்கலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று தேர்வு குழுக்களை ஏற்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள், தலைமையில் வாட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்தத் தேர்வுக் குழுவில் இடம் பெறுகின்றனர். அரசாணையின்படி சமூக நல ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.