வாக்கு எந்திரத்தில் கோளாறு என்று சொல்லுபவர்களுக்கே கோளாறு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 6 ம் தேதி 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது பல்வேறு தொகுதிகளில் எந்த பட்டனை அழுத்தினாலும் அது தாமரைக்கு பதிவானதாக அடுத்தடுத்து குற்றசாட்டுகள் எழுந்தது.
இந்தநிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்கு இயந்திரத்தில் கோளாறு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்குத்தான் கோளாறு உள்ளது. இதுவே காங்கிரஸ் வென்றால் இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பார்கள். பாஜக வென்றால் கோளாறு என்பார்கள் என்று தெரிவித்தார்.
Read more – இந்தியாவில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது.. உறுதியளித்த நிர்மலா சீதாராமன்..
வரும் மே மாதம் 2 ம் தேதி சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வெளியாகும் என்றும், அந்த தேர்தலில் பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.