துக்க சடங்கு வீட்டில் மேலும் ஒரு துயரம் : தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி

துக்க சடங்கு வீட்டில் மேலும் ஒரு துயரம் : தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி

தேனி கோடாங்கிப்பட்டியில் தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி :

தேனி கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 73 வயதான சீதாலட்சுமி. இவர், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். உயிரிழந்த சீதாவிற்கு சடங்கு செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.

அந்த மயானத்தில் தேன்கூடு ஒன்று இருந்துள்ளது. அப்போது அங்கிருந்த தேனீக்கள் திடீரென உறவினர்களை தாக்க தொடங்கியது. தேனீக்களின் அங்கிருந்தவர்கள் கொடூரமாக தாக்கியதால் அலறி அடித்து ஓட தொடங்கினர்.

Read more – விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு : டெல்லியில் தொடரும் பரபரப்பு

தேனீக்கள் தாக்கியதில் பலர் காயமடைந்த நிலையில், அனைவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனீக்கள் கொட்டி உயிரிழந்ததை கேட்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *