பவானி அருகே தீண்டாமை கொடுமையால் கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை விதித்ததால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பவானி:
பவானி அருகே புன்னம் ஊராட்சி, இந்திரா நகர் காலனி பகுதியில் 150 தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த 60 ஆண்டுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
பிற சமூக மக்களுக்கும் தனித்தனியே அப்பகுதி மக்களுக்கு தேவையான கிணறுகள் தோண்டப்பட்டு தண்ணீர் வசதி செய்து தரப்பட்டது. இக்கிணற்றின் தண்ணீரை மின்மோட்டார் மூலம் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கடந்த 16 ம் தேதி இப்பகுதியினர் தண்ணீர் இறைக்க வாளி மற்றும் கயிறுகளுடன் சென்றபோது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்ததோடு, தொடக்கூடாது என்று எச்சரித்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
Read more – தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் : 27 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை
எனவே இந்த பிரச்சினை குறித்து பவானி டி.எஸ்பி. அலுவலகத்தில் நேற்று 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை, காவல்துறை சார்பில் இன்று இரு சமூகத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.