திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக கட்சிக்கு ஆதரவு தருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். மேலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்குத் திமுக அழைப்புவிடுத்துள்ளதாகவும் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்போம் என்று தெரிவித்தார்.
Read more – புதுச்சேரியில் முதல்வர் பதவி கேட்கும் திமுக.. கூட்டணியில் கதறும் காங்கிரஸ்…
இந்தநிலையில், திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடும் எனவும், பண்ருட்டி அல்லது நெய்வேலி தொகுதியை ஒதுக்கீடு செய்ய திமுகவிடம் கேட்டுள்ளோம் என்று கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.