காவிரி கரையில் பிறந்து உயிர் பிரியும் வரை காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கருணாநிதி தான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தஞ்சை ஒரத்தநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது ; காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து அதன் உரிமையை காப்பாற்றி வருவது திமுக கட்சி தான். அதற்காக காவிரி கரையில் பிறந்து உயிர் பிரியும் வரை காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கருணாநிதி மட்டும் தான் என்றார்.
Read more – அவங்கள பத்தி பேசாத .. சப்புன்னு அடிச்சுப்புடுவேன்.. செய்தியாளர்களை மிரட்டிய தமிழக அமைச்சர்
மேலும், காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1975 முதல் போராடி இடைக்கால தீர்ப்பை பெற்று தந்தவர் நம் தலைவர் கருணாநிதி தான். அண்ணா, பெரியார் மண்ணில் மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடாது என்றும், திமுக வெளியிட்ட அறிக்கையின் படி திமுக எப்போதும் சொல்வதை செய்யும், செய்வதை சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.